பொய்யை மட்டுமே சொல்லும் CM ஸ்டாலின் ; ஆமாஞ்சாமி போடும் காவல்துறை அதிகாரிகள்… இபிஎஸ் கடும் விமர்சனம்..!!
சென்னை ; ஆளும் விடியா திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 30 ஆண்டுகால அஇஅதிமுக ஆட்சியில், ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக போற்றப்பட்ட தமிழகக் காவல்துறை, மக்களை அச்சுறுத்தி வந்த சட்டவிரோதிகளை ஒழித்த காவல்துறை, இன்றைக்கு திராவக மாடல் ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து வருவது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர்.
கடந்த 29 மாத கால பொம்மை முதலமைச்சர் திரு ஸ்டாலின் ஆட்சியில், நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து மக்கள் அஞ்சி அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றனர். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சொல்கிறார் என்றால், ஆமாம்.. ஆமாம்… என்று ஆமாஞ்சாமி போட்டு முழு பூசணிக்காயை தட்டு சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள்.
தங்களை வஞ்சிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தருணத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். விடியா திமுக ஆட்சியின் தாளத்திற்கு, மக்கள் விரோதச் செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்; தி.மு.க. இடும் கட்டளைக்கு தலையாட்டி, அறநெறி தவறும் அதிகாரிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று அதிமுக சார்பில் எச்சரிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.