வாக்குறுதி என்னாச்சு..? ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை எங்கே..? திமுகவுக்கு இபிஎஸ் கேள்வி!!

Author: Babu Lakshmanan
17 January 2024, 6:43 pm

தேர்தலின் போது அறிவித்தபடி, ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த விடியா திமுக அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!