பாஜகவுக்கு குட்பை சொல்லிட்டு திருப்பதி செல்லும் இபிஎஸ்… கனக துர்க்கை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்…!!

Author: Babu Lakshmanan
27 September 2023, 2:24 pm

விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கூட்டணிகள் திசைமாறுமா..? என்று கேள்விகள் எழுந்தன.

ஆந்திர மாநிலம் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்க்கை அம்மன் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்த தீர்த்த பிரசாதங்கள் அம்மன் புகைப்படம் வழங்கினர். இதனை அடுத்து, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, புனிதமான அம்மனை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு அரசியல் குறித்து பேச விரும்பவில்லை, என்றார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பதிக்கு வரக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 412

    0

    0