ஒருபோதும் அடிமையாக இருக்க மாட்டேன்… கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற CM ஸ்டாலின் வேண்டுமானால் அடிமையாகலாம் ; இபிஎஸ் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 7:57 pm

நான் ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் அடிமையாக மாட்டேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது :-காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி மக்களை ஏமாற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெங்களூருக்கு சென்ற அவர், காவிரி விவகாரம் குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்பவில்லை.

பா.ஜ.க கூட்டணியில் இருந்த போதும் 24 நாட்கள் காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது. எப்போது பார்த்தாலும் நான் பாஜகவின் அடிமை என்கிறார் ஸ்டாலின். ஒரு போதும் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன். ஸ்டாலின் வேண்டுமானால், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற அடிமையாக இருக்கலாம். அதிமுக, மற்றும் தொண்டர்கள் யாரும் அடிமையாக இருக்க மாட்டார்கள்.

விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க., அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!