பீர் முக்கியமல்ல.. நீர் தான் முக்கியம் ; மதுவை விற்பதிலேயே திமுக அரசு குறி… இபிஎஸ் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 12:41 pm

தமிழகத்தில் வறட்சி நிலவும் காலத்தில் அதனை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஓய்வெடுக்க சென்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் கடந்த 30ம் தேதி தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க: நள்ளிரவில் இருவீதியைச் சேர்ந்த பெண்கள் மோதல்… போதை ஆசாமிகளால் போர்க்களமான குடியிருப்பு பகுதி… ; கோவையில் பரபரப்பு!!!!

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, பழம், குடிநீர், ஆர்லிக்ஸ் போன்றவற்றை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது ஆங்காங்கே குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் போராட்டங்களிலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை கவனிக்காத தமிழக முதலமைச்சர் ஓய்வெடுக்க சென்றதாக தெரிவித்தார்.

மக்களைப் பற்றி ஏதும் கவலை கொள்ளாமல், மக்களைப் பற்றி சிந்திக்காமல் தமிழக முதலமைச்சர் செயல்படாத முதலமைச்சர் ஆக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், தற்போது மேட்டூர் அணை வறண்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தர தமிழக அரசு எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு மதிக்கவில்லை. தமிழக அரசு இதனை வலியுறுத்தி தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் இதனை கண்டு கொள்ளாதது கண்டடத்துக்குரியது, என்றும் தெரிவித்தார்

தமிழகத்தில் கோதுமை பீர் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து கேட்டபோது, மதுவை விற்பதிலேயே திமுக அரசு குறியாக உள்ளது. அவர்களுக்கு வருமானம் தான் முக்கியம். மக்களைப் பற்றி கவலை ஏதும் இல்லை, என்றார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு, ஜெர்மனி நாட்டு ஒப்பந்தத்துடன் பேருந்து வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அதற்கு பிறகு வந்த திமுக அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும், புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்து, இதுவரை வாங்கவில்லை. இது குறித்து சட்டமன்றத்திலும் அறிக்கையின் வாயிலாகவும் தான் தெரிவித்ததாக கூறினார்.

தமிழகத்தில் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறித்து சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களே நேரடியாக புகார் தெரிவித்து வருவது ஆட்சியின் அவலத்தை காட்டுவதாகவும், விடியா திமுக அரசின் இந்த அவலத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், இனியாவது புதிய பேருந்துக்களை வாங்கி பொதுமக்களை பயன்பாட்டுக்காக விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை, அதற்கு பிறகு வந்த திமுக அரசு முடக்கியுள்ளதாகவும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 100 ஏரி நிரப்பும் திட்டம், ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் 85 சதவீதம் அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டு, இதுவரை திமுக அரசு அது முடிவுக்கு கொண்டு வரவில்லை. இது போன்ற திட்டங்களை திமுக அரசு உள்ளக்நோக்கத்துடன் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் ஒற்றை செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பல லட்சம் செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படாமல் உள்ளது கண்டனத்திற்கு உரியது, என்றும் தெரிவித்தார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 305

    0

    0