முதலமைச்சர் ஸ்டாலினின் நீங்கள் நலமா திட்டம் தொடங்கியதை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விலைவாசி உயர்வுகளால் மக்கள் நலமாக இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பயனாளிகளிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த திட்டத்தை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி X தளப்பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள பதிவில், ” “நீங்கள் நலமா” என்று கேட்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே- நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!
இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!, எனக் கூறினார்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.