மகளிருக்கு மாதம்தோறும் ரூ.3000 உரிமைத்தொகை… கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ; அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Author: Babu Lakshmanan
22 March 2024, 12:10 pm

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையையும் அறிவித்து விட்டது. பாஜகவும் அடுத்தடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதேவேளையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த இரு தினங்களாக இரு கட்ட வேட்பாளர்களை அதிமுக அறிவித்து விட்டது.

இந்த நிலையில், 133 வாக்குறுதிகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

முக்கிய அம்சங்களாவது :-
மகளிருக்கு மாதம் ரூ.3000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
நீட் தேர்வுக்கு மாற்றுத்தேர்வு முறை கொண்ட வர வலியுறுத்தப்படும்
கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வலியுறுத்தப்படும்
கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்துவோம்

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை
முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும்

ஆளுநர் பதவியில் நியமனம் செய்யும் போது மாநில அரசின் கருத்துக் கேட்க நடவடிக்கை
குற்றவழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்
மத்திய அரசு அறிவித்த ஒசூர் விமான நிலையத்தை விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்
நாகை, திருவாரூர், புதுச்சேரியின் காரைக்கால் உள்ளடங்கிய ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்

கோவையில் மத்திய அரசின் என்ஐடி கல்வி நிறுவனத்தை அமைக்க வலியுறுத்துவோம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வலியுறுத்தல்
அப்பளம், குண்டு வத்தல், பரமத்தி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க வலியுறுத்துவோம்
தென்மாவட்டங்களின் நலன் கருதி மதுரையில் ஐஐடி, ஐஐஎம் அமைக்க வலியுறுத்தல்
குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தினசரி கூலியாக ரூ.450 வழங்க வலியுறுத்தல், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 253

    0

    0