உங்க தாத்தாவுக்கு சிலை அப்பன் வீட்டு பணத்துலயா வைக்கறீங்க..? முட்டாள் அரசு… ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
13 December 2023, 5:51 pm

மத்திய குழு மக்களை சந்திக்கவில்லை என்றும், போட்டோ மட்டும் பார்த்துவிட்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பின் போது கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளால், எண்ணூர் முகத்துவாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிர்வாகிகளுடன் படகில் ஏறி சென்று பார்வையிட்டார்.

இதன் பின்னர் பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது ;- தமிழக அரசு வரும் முன் நடவடிக்கையாக வெள்ளத்தை தடுத்து இருக்கலாமா..? தமிழக அரசு cpcl நிறுவனத்துடன் வாதாடி நிவாரணம் பெற்று தர வேண்டும். பழவேற்காடு முதல் மரக்காணம. வரை கணக்கீடு செய்ய வேண்டும்.

எண்ணூர் பகுதியில் உள்ள 6 மீனவ கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வீடுக்கு ஒருவருக்கு cpcl நிறுவனம் வேலை அளிக்க வேண்டும். IIT உதவி நாட வேண்டும்.

மத்திய குழு மக்களை சந்திக்கவில்லை. போட்டோ மட்டும் பார்த்துவிட்டு சென்றனர். காவல்துறை மூலம் மக்கள் தடுக்கப்பட்டனர். உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கின்றோம். மக்களுக்கு அள்ளி கொடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 372

    0

    0