மக்கள் இன்னும் மறக்கல… பச்சைப்பொய் கூறுகிறார் CM ஸ்டாலின் ; காவிரி விவகாரத்தில் இன்னும் மவுனம் ஏன்..? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 11:33 am

மதுரை ; 99 சகவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுவது பச்சைபொய் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; – முதலமைச்சர் ஒரு திருமண விழாவில் 99 சகவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று கூறியுள்ளார். இதுதான் மக்களின் இன்றைக்கு விவாதமாக இருக்கிறது. உண்மை நிலவரம் என்னவென்றால் இன்றைக்கு 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக தோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் மக்கள் உங்களுக்கு தருகிற மதிப்பெண்ணாக இருக்கிறது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல, இப்படி பொய் பிரச்சாரத்தை முழுக்க, முழுக்க பச்சை பொய்யை நீங்கள் கட்டவிழ்த்து விட்டு இருப்பது மக்களிடத்திலே மிகப்பெரிய ஒரு பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
நீங்கள் கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதியை மறந்து விட்டீர்கள். ஆனால், மக்கள் இன்னும் மறக்கவில்லை.

நீட் தேர்வு ரத்து, தகுதியுள்ள அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உயர் உதவி தொகை, முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாய் உயர்த்தி தரப்படும், கல்விக் கடன் ரத்து செய்யப்படும், அதேபோல், 5 பவுன் நகை அடகு வைத்திருந்தால் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால், 35 லட்சம் மக்கள் வாங்கிய கடனை ரத்து செய்யாமல் ஏமாற்றி விட்டீர்கள். வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு என்று கூறிய 520 தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றவில்லை.

அதேபோல், சொத்து வரி உயர்த்தப்பட்டது மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடுவோம் கூறுனீர்கள். எதுவும் செய்யவில்லை, சட்ட ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது. இதையெல்லாம், பூசிமொழிகி உங்களை நீங்கள் பாராட்டிக்கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடியார் கொண்டு வந்த நதிநீர் இணைப்பு திட்டம், காவிரி குண்டார் இணைப்பு திட்டம், நடந்தால் வாழி காவிரித் திட்டம் ஆகிய திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டீர்கள்? 

தற்போது கர்நாடகா முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தண்ணீர் தர முடியாது என்று பகிரங்கமாக கூட்டத்தில் கூறிவிட்டனர். ஆனால் இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது குறுவை சாகுபடி எல்லாம் கருகி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் வேதனையோடு கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் தரமாட்டேன் என என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று கேட்க வேண்டாமா?

காவேரி பிரச்சனையில் மென்மையான போக்கை நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள். காங்கிரஸுடன் ஒத்து போனால் தான் பதவியை பெற முடியும், அதுக்கு கர்நாடகா காங்கிரஸ் தகுதி தேவை என்று மென்மை போக்கை நீங்கள் கடைப்பிடித்து வருகிறீரகள். தமிழ்நாட்டின் விவசாயிகள், தமிழ்நாட்டு மக்கள் நாதியற்றவர்களா ?அனாதைகளா? உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக மதிப்பதில்லையே, அப்படியானால் நீங்கள் ஒரு கண்டனத்தை தெரிவிக்க வேண்டாமா? தொடர்ந்து எடப்பாடியார் இது குறித்து கடுமையாக குரல் கொடுத்து வலியுறுத்தி வருகிறார்.

தொடர்ந்து காவிரி பிரச்சனையில் மௌன சாமியார்களாக உள்ளீர்கள், கூட்டணி கட்சிக்காக அங்கே சென்ற நீங்கள், தமிழ்நாட்டு மக்களுடைய வேதனையை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அங்கு அந்தக் கூட்டத்தில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டாமா?, கூட்டணியை வலுப்படுத்த செல்லும் நீங்கள் அங்கு பேச மறுப்பது ஏன்?

99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுவது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது இது பச்சைபொய் என கூறினார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 413

    0

    0