திமுக – பாஜக இடையே கள்ள உறவு… பேரம் பேசும் அண்ணாமலை..? பாஜக பிரமுகரை எச்சரித்து எஸ்.பி. சண்முகநாதன் பேசும் ஆடியோ வைரல்!!

Author: Babu Lakshmanan
14 March 2023, 10:20 am

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விடும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தெரிவித்தார்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் SP.சண்முகநாதன் பேசுகையில், திமுக – பாஜக இடையே கள்ள உறவு உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் பலர் ஊழல் செய்து விட்டனர். அவர்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க போகிறேன் என்று புகார் அளித்தார். இந்த புகார் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வேண்டியது, புகார் விசாரணைக்கு வந்ததும், எனக்கு இவ்வளவு கொடு என்று சொல்லும் வேலையை அண்ணாமலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இது தான் உண்மை நிலவரம். அதிமுக ஆட்சி நடக்கும் போது வருமான வரித்துறை, சிபிஐ அதிகாரிகளை வைத்து அமைச்சர்கள் அறைக்கே சென்று சோதனைகளை செய்த மத்திய அரசு, இப்போது ஏன் அதை செய்யவில்லை. அப்படி என்றால் அது கள்ள உறவா?

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்துப் போட்டியிட்டால் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விடும். தமிழகத்தில் கடைசியாக வரும் எதுவும் நிற்காது திமுகவா, அதிமுக வா. ஸ்டாலினா, எடப்பாடி பழனிச்சாமியா இது தான் வரும், என்றார்

எது அதிமுக என்று தெரியாமல் பாஜக அரசியல் செய்யக்கூடாது என்று பாஜக பிரமுகரிடம் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், ஏன் அண்ணாச்சி பாஜக குறித்து இப்படி பேசுறீங்க என்று அந்த பாஜக பிரமுகர் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், அதிமுக என்றால் எது என்று தெரியுமா ?. அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி கிட்ட இருக்கு. நீங்க (பாஜக) ஓபிஎஸ் பாத்துட்டு , ஓபிஎஸ் -இபிஎஸ் என்று பேசிகிட்டு இருக்கீங்க. நீ பாஜகவாக இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை.

அதிமுகவில் 2600 பொது குழுவில், 2500 பொதுக்குழு உறுப்பினர் எங்களிடம் உள்ளனர். மாவட்டச் செயலாளர் 76 பேரில், 71 பேர் ‌ உள்ளனர். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 75 பேரில் 71 பேர் எங்களிடம் உள்ளனர். அப்படின்னா எது அதிமுக..
இது தெரியாம பிஜேபி அரசியல் செய்யக்கூடாது, என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?