அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க திட்டமா..? டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் ; அரசியலில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 7:52 pm

தமிழகத்தில் பாஜக- அதிமுக இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக நிர்வாகிக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையான பதிலடியை கொடுத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஆனால், தலைமை இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்தது. இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமூக வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அ.தி.மு.க. குறித்தோ, கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என்று பா.ஜ.க.வினருக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல, அதிமுகவினருக்கும் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இருதரப்பு மோதல் சற்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் முகாமிட்டுள்ள இவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து முறையிட திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ