அதிமுகவை சீண்டினால் இனி அவ்வளவுதான்… டிடிவி தினகரனுக்கு கே.பி. முனுசாமி பகிரங்க எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
4 July 2022, 5:10 pm

சசிகலா போன்றர்கள் சந்தர்ப்ப வாதிகள் ஆதாயம் போய்விட்டது என்பதற்காக இதுபோன்ற பிதற்றல்களை கூறிவருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில்வே மேம்பால புணரமைப்பு பணி முழுமையாக முடிவடையாத நிலையில், வேலூர் மாநகர் அதிமுக மாவட்ட செயலாளர் SRK அப்பு கடந்த 1-ம் தேதி பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வைத்தார். இது தொடர்பாக வருவாய் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்ஆர்கே அப்பு மீது பிணையில் வரமுடியாத பிரிவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை முன்னாள் அமைச்சரும், தற்போதைய வேப்பனஹல்லி எம்.எல்.ஏவுமான கே.பி.முனுசாமி சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மாவட்ட செயலாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் விரைவில் அவரை பிணையில் எடுப்போம்.

11ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆகியே தீருவார். ஆன்லைனில் பொது கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எங்களுக்கு அனுமதி அளித்துள்ளார், எனக் கூறியுள்ளார்.

பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை வைத்ததாக வைத்திலிங்கம் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு அவர் அளித்த பதிலாவது :- வைத்திலிங்கம் எங்களோடு பயணித்தவர் அவர். இப்படிச் சொல்வது வேதனையாக இருக்கிறது. மேலும் அவர் விரக்தியில் இருக்கிறார். மேலும், பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறி வருகிறார்.

அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். மீண்டும் ஒருமுறை டிடிவி தினகரன் இப்படி சொன்னால் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைக்கும் சூழல் வந்துவிடும். அவர் இந்த இயக்கத்துக்கு எந்த தியாகத்தையும் செய்யாதவர். இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர். அவருக்கு கட்சியை பற்றி பேச எந்தவித தகுதியும் கிடையாது. தகுதி இல்லாத நபர் மீண்டும் இதுபோன்று கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும்.

சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார் அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது. கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்ப வாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள். சசிகலா போன்றர்கள் சந்தர்ப்ப வாதிகள் ஆதாயம் போய்விட்டது என்பதற்காக இதுபோன்ற பிதற்றல்களை கூறிவருகிறார்கள்.

தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அதிமுகவினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து அரசு தவறும் பட்சத்தில், மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எடுத்து இருக்கும் பட்சத்தில் நடத்தி வருகிறது, எனக் கூறினார்.

தமிழர்களை மதவாதத்தை கொண்டு இருக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் மதவாதத்தை கண்டு பயப்படுகிறார். இதுதான் உண்மை என கூறினார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!
  • Close menu