பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை… பரபரப்பான சூழலில் கூடுகிறது அதிமுக பொதுக்குழு.. வானகரத்திற்கு ஓபிஎஸ் வருகை..!!

Author: Babu Lakshmanan
23 June 2022, 8:42 am

சென்னை : அதிமுக பொதுக்குழு இன்று கூட உள்ள நிலையில், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Chennai HC -Updatenews360

இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரிடையே காரசார வாதம் நடந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்தவித முடிவும் பொதுக்குழுவில் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம், தீர்மான குழு முடிவு செய்த அறிக்கையில் இடம்பெறாத, ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓபிஎஸ் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 570

    0

    0