அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது வரை மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 65க்கும் மேற்பட்டோரின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், முக்கிய தலைவர்களான மைத்ரேயன் உள்பட ஓபிஎஸ் நம்பிக்கைக்குரிய நபர்களும் இபிஎஸ் பக்கம் தாவி விட்டனர். இதனால், ஓபிஎஸ்க்கு இருந்த ஆதரவு 11ல் இருந்து 6ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, நாளை நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், எனவே, நாளை நடக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு இபிஎஸ் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவில் பங்கேற்பது தொடர்பாக இன்று மாலைக்குள் முடிவு செய்து சொல்வதாகக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 3 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்போது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் 23 தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் ஏற்க முடியாது என்று ஓபிஎஸ் கூறியதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, கட்சியின் சட்ட விதிகளை மீறி செயல்பட மாட்டேன் என்றும் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில், நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு, செயற்குழு கூடுவதாகவும், அழைப்பை ஏற்று அனைத்து உறுப்பினர்களும் வந்தடைந்து விட்டதாகக் குறிப்பிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும் என்று கூறினார்.
வேறு அஜெண்ட ஏதும் இருந்தால் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்ற விதியை காட்டுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பி கேள்வி எழுப்பியது. மேலும், பொதுக்குழுவில் விதிகளை திருத்தம் செய்ய இபிஎஸ் முடிவு செய்து விட்டதாகவும், அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, பொதுக்குழுவில் திடீரென ஒரு விவகாரத்தை எழுப்ப மாட்டார்களா..? என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினர்.
பொதுக்குழுவில் முடிவெடுப்பவர்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் என்றும், முன்மொழிவுகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தந்த பிறகே, பொதுக்குழுவில் வைக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதியில்லை என்றும், வழக்கமான பணிகள் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பொதுக்குழுவில் நடக்கலாம் என்ற மனநிலையில் செல்ல முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனைக் கேட்ட இபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவுக்கு எதிர்பார்ப்புடன் உறுப்பினர்கள் வருவார்கள், இதெல்லாம் நடக்கும் என இப்போதே கூறுவது முதிர்ச்சியற்றது என்றும், கூட்டத்தில் என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது என்று எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.
நாளை பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினரிடையே காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.