மதுரை : 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டு கொடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- தற்போது உள்ள விதியின் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. விதியை மாற்றினால்தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அதிமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். நல்ல தலைமை வர வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.
ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது. அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொதுக்குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை. சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல. மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கிளைக் கழகச் செயலாளர், தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம். அவர்கள் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். 2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என நான் கூறினேன்.
தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை. அதற்கு தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை.
ஜானகி பெருந்தன்மையாக விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சி ஆரம்பித்தபோது, சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்திய கட்சியை கட்டிக் காப்பாற்றியவருக்கு மற்றொருவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும், என அவர் தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.