தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பதிலளித்துள்ளார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 ஆவது சதய விழாவையொட்டி மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் படிக்க: கஞ்சா சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு… சிறுவர்கள் தான் டார்க்கெட் ; அட்மினை கொத்தாக தூக்கிய போலீசார்…!!!!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் சொல்லப்பா கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும்,” என்றார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்குஇ “கிஞ்சிற்றும் இடமில்லை”, எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயலாற்றி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய ராஜ தந்திரியாக பணியாற்றி வருகிறார். மற்றவர்களைப் போல தன்னை ஒப்படைப்பதற்காக அல்ல. அதிமுகவை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை காக்க பணியாற்று வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அதிமுக ஆகியவைகளில் எடப்பாடி பழனிச்சாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.
அதிமுக தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல. அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தகுதி அறிந்து திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி, மழைக்காலங்களில் பேரிடம் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் திமுக அரசு கொடுக்கவில்லை,” என கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.