அதிமுக எம்பி சி.வி. சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி ; குவிந்த நிர்வாகிகள்… தொண்டர்கள் அதிர்ச்சி..

Author: Babu Lakshmanan
4 August 2023, 12:02 pm

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜுன் 22ம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு கட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆனார்.

இதனிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இப்படியிருக்கையில், நேற்று இரவு திடீரென சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, சிவி சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி