அதிமுக அலுவலக கலவர வழக்கு : FIR-ல் ஓபிஎஸ் பெயர் முதல் எதிரியாக சேர்ப்பு… இபிஎஸ் தரப்பு அதிரடி..!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 5:10 pm

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கும் போது, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சென்றார். அங்கு அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கியதோடு, கட்சியின் முக்கிய ஆவணங்களையும் ஓபிஎஸ் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடியதாக சிவி சண்முகம் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிவி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் முதல் எதிரியாக ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2வது எதிரியாக வைத்திலிங்கம், 3வது எதிரியாக மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…