இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி… திமுகவுக்கு செக் வைத்த அதிமுக ; உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு தாக்கல்!

Author: Babu Lakshmanan
22 June 2023, 1:11 pm

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகசா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு முன்மொழிந்ததை ஏற்கவில்லை.

ஆனால், ஆளுநரின் நிராகரிப்பையும் மீறி, தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் “செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை ஆளுநர் அங்கீகரிக்கவில்லை. செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதால் அரசு பணம் வீணாகும். எந்த அடிப்படையில் அவர் அமைச்சராக நீடிக்கிறார், என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 341

    0

    0