தனித்தனியே ஆலோசனை… நாடாளுமன்ற தேர்தலுக்காக வியூகம் வகுக்கும் அதிமுக… வெளியான அறிவிப்பு…!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 12:05 pm

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக அணி வாரியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில தினங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுமுனையில் கூட்டணியை அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற பணிகளை தொடங்கிய அதிமுக, தங்களின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையை தீவிரப்படுத்தியுள்ளது. அதாவது, அதிமுக அணி வாரியாக ஆலோசனை நடத்த முடிவு செய்த அக்கட்சியின் தலைமை, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிப்., 2ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அம்மா பேரவை மாநில செயலாளர் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், பிப்.,4ம் தேதி மகளிரணி மாநில செயலாளர் வளர்மதி தலைமையில் மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கானஅதிமுகவின் பிரசார வியூகம் குறித்து அக்கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் தனித்தனியே ஆலோசனை நடத்துகின்றனர்.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 278

    0

    0