போதைப்பொருள் விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை மறுத்து பேசாதது ஏன்..? சிவி சண்முகம் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 12:46 pm

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்கள் சந்தித்த சிவி சண்முகம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும், தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசவில்லை, என குற்றச்சாட்டினார்.

போதை பொருள் கடத்தலில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால் முதல்வர் பேச மறுக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது என்றும், சிந்தடிக் டிரக்ஸ் உலக நாடுகளில் கிடைக்கக்கூடிய போதைப்பொருட்கள் எல்லாம் தமிழகத்தில் சாதாரணமாக கிடைக்கிறது எனவும், ஏன் இதற்கு முதல்வர் பதில் சொல்ல மறுக்கிறார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.

இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?