அன்று கொள்ளைகாரனாக தெரிந்த செந்தில் பாலாஜி… இன்று திமுக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் ; தமிழ் மகன் உசேன் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 9:27 am

அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி செய்த ஊழலுக்கு அதிமுக பொறுப்பேற்காது என்று அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர் : அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த ஊழலுக்கு அதிமுக பொறுப்பேற்குமா என கேள்வி எழுப்பினார்.

தமிழ் மகன் உசேன் : அதிமுக நிச்சயமாக பொறுப்பேற்காது. செந்தில் பாலாஜி தான் பொறுப்பேற்க வேண்டும். அதிமுக காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக கேள்விப்பட்ட உடனே, அப்போதைய முதலமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார்.

குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட ஒருவரை நள்ளிரவில் சந்தித்து நலம் விசாரிப்பது முறைதானா? சரக்கு இது சரிதானா வேலை தானா என எண்ணி பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என தெரிந்தவுடன் அதிமுகவினர் யாரும் அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி கொள்ளைக்காரன் என்று பல கூட்டங்களில் பேசிய நிலையில், தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளார் ஸ்டாலின்.

செய்தியாளர் : நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு, அது நடிகர் விஜயின் செயல்பாடு என பதிலளித்தார்.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!