முழுக்க முழுக்க அதிமுகவை தன்வசப்படுத்திய இபிஎஸ் : ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன சசிகலா..!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 5:31 pm

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது குறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது ;- அதிமுக பொதுச்செயலாளரை பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஓபிஎஸ் மட்டுமல்ல எல்லோரும் வந்தாலும் நான் சந்திப்பேன், எனக் கூறினார்.

முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள், என்றார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றது குறித்து உங்களுடைய பதில் என்ன என்ற கேள்விக்கு, “இனிமேல் பார்க்கத்தானே போறீங்க”, எனக் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி