நாளை அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம்… ஜனநாயகப் படுகொலை செய்த தமிழக அரசு… இபிஎஸ் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 1:50 pm

தமிழக அரசைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக்‌ கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக இடைக்காலப்‌ பொதுச்‌ செயலாளரும்‌, மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவரும்‌, தமிழ்‌ நாடு முன்னாள்‌ முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ தலைமையில்‌, கழக சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பங்கேற்கும்‌, ஒரு நாள்‌ அடையாள உண்ணாவிரதப்‌ போராட்டம்‌, நாளை சென்னை, வள்ளுவர்‌ கோட்டம்‌ அருகே நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தில்‌, அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களும்‌ கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இந்த ஒரு நாள்‌ அடையாள உண்ணாவிரதப்‌ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்‌ வகையில்‌, கழக அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச்‌ சேர்ந்த மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ உள்ளிட்ட கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ கழக நிர்வாகிகள்‌ மற்றும்‌ தொண்டர்களும்‌ கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இந்த ஒரு நாள்‌ அடையாள உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர்‌ அலுவலகத்தில்‌ கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ அமைச்சருமான தளவாய்சுந்தரம்‌, கழக அமைப்புச்‌ செயலாளரும்‌, தென்‌ சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளரும்‌, முன்னாள்‌ வாரியத்‌ தலைவருமான ஆதிராஜாராம்‌ ஆகியோர்‌ நேரில்‌ வழங்கி உள்ளனர்‌, என தெரிவித்துள்ளார்.

  • Ajith 102 fever shooting dedication “SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 404

    0

    0