வேகமாக பரவி வரும் டெங்கு; அச்சத்தில் இந்தியாவின் “சிலிக்கான் வேலி” நகரம்; பொதுமக்களே உஷார்,..

Author: Sudha
12 ஜூலை 2024, 8:32 காலை
Quick Share

இந்தியாவின் சிலிகான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏடிஸ் ஏஜிப்டி என்னும் ஒரு வகை கொசுவால் பரவும் இந்த நோய் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விடும்.

டெங்கு அறிகுறிகள் பல பேருக்கு வெளிப்படையாக தெரிவதில்லை,காய்ச்சல் கொசுவால் கடிக்கப்பட்ட நான்கு முதல் 10 நாட்களுக்குப் பிறகு தொடங்கும்.

டெங்கு அதிக காய்ச்சலை ஏற்படுத்துகிறது – 104 F (40°C)

தலைவலி தசை,

எலும்பு அல்லது மூட்டு வலி

குமட்டல் வாந்தி

கண்களுக்குப் பின்னால் வலி

சுரப்பிகளில் வீக்கம் ஆகியவை ஏற்படும்.

டெங்கு பரவியிருக்கும் இடங்கள்

பொம்மனஹள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் 13,

கோனானகுன்டே 9,

தாசரஹள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட டி.தாசரஹள்ளி 8,

அப்பிகெரே 4,

கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சி.வி.ராமன் நகர் 17,

நியூ திப்பசந்திரா 12,

மகாதேவபுரா மண்டலத்திற்கு உட்பட்ட பெல்லந்தூர் 12,

தொட்டகானஹள்ளி 9,

ஆர்.ஆர்.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஞானபாரதி 7,

கெங்கேரி சாட்டிலைட் டவுன் 8,


தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட என்.எஸ்.பால்யாவில் 12

லார்வாக்களின் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.டெங்கு அதிகம் பதிவாகியுள்ள இடங்களில் இருந்து அதிகப்படியான மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த லார்வாக்களில் ஏதேனும் வைரலாஜிக்கள் மாறுபாடுகள் இருக்கின்றனவா? என்று ஆராயப்படுகிறது.

சுற்றி சுற்றி கொசு மருந்து அடித்து விரட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. பொதுமக்களும் வீடுகளில் கொசு விரட்டிகளை வைத்து தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு காரணம் டெங்கு காய்ச்சல். மற்ற மெட்ரோ நகரங்களை காட்டிலும் பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்படுகிறது. தூய்மை பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை அதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

டெங்கு காய்ச்சலில் அதிகமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 174

    0

    0