செந்தில் பாலாஜியிடம் சென்னையில் துருவி துருவி விசாரணை… மறுபுறம் மீண்டும் ரெய்டை கையில் எடுத்த ED… கரூரில் பரபரப்பு…

Author: Babu Lakshmanan
9 August 2023, 1:07 pm

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், தற்போது அவரை 5 நாட்களில் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர் கொடுக்கும் வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது மனைவி பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…