மீண்டும் ஒரே ஒரு செங்கல்… ஆ.ராசா கேட்ட கேள்வி : ஒரே வரியில் பதிலடி கொடுத்த நட்டா!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2024, 2:22 pm

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த விவகாரத்தை திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பினார்.

விவாதத்தில் மதுரை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது என்று கூறிய அவர் தொடர்ந்து பேசியதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது,மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன்தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 249

    0

    0