பிப்.,1 முதல் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு.. இறுதியாண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி தேர்வு : அமைச்சர் பொன்முடி
Author: Babu Lakshmanan21 January 2022, 12:55 pm
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் பிப்.,1 மீண்டும் ஆன்லைனில் நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் கொரோனா பரவலின் 3வது அலையின் தாக்கம் மிகவும் மோசமாக உள்ளது. நேற்று மட்டும் சுமார் 29 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில் நடக்கும். கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடக்காத வகையிலும் குளறுபடி இல்லாமலும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.