தேச நலனுக்கு எதிரானது அக்னிபாத் திட்டம் : உடனே திரும்ப பெற மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 7:04 pm

சென்னை: தேச நலனுக்கு எதிராக உள்ள அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில் நிலையங்களை சூறையாடி இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாவது: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச நலனுக்கு எதிராகவும் இளைஞர்களின் ராணுவப்பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திட்டத்தை கேள்விப்பட்டு திடுக்கிப்போனேன் என முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி. பாக்ஸி கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 556

    0

    0