சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு… இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.. வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்னென்ன தெரியுமா..?
Author: Babu Lakshmanan19 March 2022, 12:05 pm
2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-
மண்புழு உள்ளிட்ட இயற்கை உரங்களை தயாரிக்க குழுக்கள் அமைப்பு – தலா ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு
தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குறுவை சாகுபடி 4 லட்சம் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்றது
நெல் சாகுபடி மொத்த அளவு 53.56 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.154 கோடி இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது
விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், 59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி
தமிழகத்தில் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு
நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மானாவாரி நிலத்தொகுப்பு திட்டத்திற்கு ரூ.132 கோடி ஒதுக்கீடு
இயற்கை விவசாயத்தை ஊக்கவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு
இளையோர் வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் நிதியுதவி
அறுவடைக்குப் பின் நடைபெறும் நெல் சாகுபடிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும்
15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கருவிகளை தொகுப்பு வழங்கப்படும்
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும்
முதற்கட்டமாக 200 வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
அறுவடை செய்த தானியங்கள் மழையில் நனையாமல் காக்க 60,000 விவசாயிகளுக்கு ரூ.5 கோடி செலவில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்
வேளாண் காடுகளை உருவாக்கி வனவளத்தை அதிகரிக்க வேண்டும்
செம்மரம், சந்தனம், மகோகனி உள்ளிட்ட மதிப்புமிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்
வடமாவட்டங்களில் ஒன்று, தென்மாவட்டங்களில் ஒன்று என 2 சிறுதானியச் சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்
வேளாண்மையுடன் ஆடுமாடு கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை
பருத்தி பயிரிடுவதை அதிகரிக்க நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
இயற்கை முறை பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்படும்
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் ஏற்படுத்தப்படும்
சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்
சூரியகாந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.28 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறையில் விதை முதல் உற்பத்தி வரை, அனைத்தையும் ஒருங்கே அறிந்து கொள்ளும் வகையில் பிரத்யேக செயலி உருவாக்கப்படும்
தமிழக விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள மண்ணின் வளம், தன்மை குறித்து அறிந்து கொள்ள புதிய ஏற்பாடு
தமிழகத்தில் மரம் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மாவட்டங்கள் அளவிலும் மாநில அளவிலும் முதலமைச்சர் தலைமையில் ‘சிறு தானிய திருவிழா’ நடைபெறும்
வேளாண் ஒழுங்குமுறை விரிவாக்க மையங்களில் கிரெடிட் கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு
டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை, விவசாயிகள் அனைவரும் அறியும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.195 வழங்கப்படும்
கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், திசு கரும்பு நாற்று வளர்ப்பு உள்ளிட்டவை ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்
கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை எடைபோட நவீன எடை மையங்கள் அமைக்கப்படும்
7500 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்
சேலம், திருவள்ளூர், தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை
மயிலாடுதுறையில் இயங்காமல் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை
காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப்பயிர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை
மாற்றுப்பயிர் திட்டத்தை 20 ஆயிரம் ஏக்கரில் செயல்படுத்தும் வகையில் ரூ.16 கோடி ஒதுக்கீடு
கோவை வேளாண் பல்கலை.,யுடன் இணைந்து தமிழ் ‘மண் வளம்’ என்ற புதிய இணைய முகப்பு உருவாக்கப்படும்
கோவை, தேனி, கன்னியாகுமரியில் தனியார் பங்களிப்புடன் புதிய காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும்
தேனீ வளர்ப்பு தொகுப்பு திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு
38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடி திட்டத்திற்கு ரூ.27.51 கோடி ஒதுக்கீடு
தென்னை, மா, வாழை உள்ளிட்டவற்றின் சாகுபடிக்கு இடையே ஊடுபயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படும்
பண்ணை சாகுபடி முறையில் இயந்திரமயமாக்கல் திட்டதை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
10 இடங்களில் புதிய உழவர் சந்தைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
50 இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநில மரமான பனைமரங்களை பாதுகாக்க நடவடிக்கை
மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்களை வாங்க 75% மானியம் – ரூ.2 கோடி ஒதுக்கீடு
பனை மரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்
ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 25 லட்சம் பனைகளை நடவடிக்கை
பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் வரும் நிதியாண்டில் 10 லட்சம் பனைகளை வளர்க்கத் திட்டம்
பனைத்தொழில் மேம்பாட்டுக்கு 2.65 கோடி ஒதுக்கீடு
கருப்பட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சிறப்பு மானியம்
திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் உள்ள உணவு பூங்காக்கள் அமைக்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு
மயிலாடுதுறையில் புதிதாக மண் பரிசோதனை நிலையம் 75 லட்சம் மதிப்பில் தொடங்கப்படும்
அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசி போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு
விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும் கிராம பஞ்சாயத்துக்களில் சாலைகள் அமைக்க ரூ.604.73 கோடி ஒதுக்கீடு
4,250 ஏக்கரில் மலர்ச்செடிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.5 கோடி செலவிடப்படும்
6,250 ஏக்கரில் மஞ்சள், இஞ்சி பயிரிடுவதை ஊக்குவிக்க 3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சிறுதானிய மண்டலம்
இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியதாக 2வது சிறுதானிய மண்டலம்
செல்போன்கள் மூலம் மோட்டார்களை இயக்கும் நுட்பத்தை விவசாயிகள் பெறும் வகையில் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு
பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி
சென்னை, திருச்சியில் பூச்சிக்கொல்லி அளவை அறிந்து கொள்ளும் வகையில் ரூ.15 கோடியில் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்
உழவர் சந்தைகளில் காலையில் காய்கறிகளும், மாலையில் சிறு தானியங்களும் விற்க நடவடிக்கை
கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் 1,250 ஏக்கரில் பூண்டு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை
முருங்கை ஏற்றுமதி உள்ளிட்ட தேவைகள் ஊக்குவிக்க, அதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
தமிழக அரசின் மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை
நீர்ப்பாசனத்தில் தானியங்குமயமாக்கலுக்கு நவீன இணையதள தொழில்நுட்பம்
பம்புசெட்டுகளை தொலைவில் இருந்தே செல்போன் மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு ரூ.5,000 வரை மானியம்
காவிரி டெல்டாவில் 4,694 கி.மீ. கால்வாய் மற்றும் வாய்க்கால்களை தூர்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு
மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்களை 38 கிராமங்களில் அமைக்க ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு
திருவாரூரில் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்
நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்
வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி