அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது… பாஜகவை நாங்கள் சுமக்க தயாராக இல்லை : ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan18 September 2023, 2:34 pm
அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது… பாஜகவை நாங்கள் சுமக்க தயாராக இல்லை : ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு!!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது, அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா கூறிய பகுத்தறிவுக் கருத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அதற்குப் பின் அண்ணா முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் பேசினார். இதனால் அதிமுக – பாஜக இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ளது.
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.
எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார் என்றார்.