பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க போட்டா போட்டி… இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 11:48 am

பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க போட்டா போட்டி… இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளை கேட்டுள்ளது. அதேபோல, 12 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தேமுதிக நிபந்தனை போட்டுள்ளது.

இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் இறுதிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுவது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவா அல்லது அதிமுகவா என எந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி போடப்போகிறது என்பது ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 281

    0

    0