ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் 4-ஆவது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பபங்கேற்றனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ் உடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது.
தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, எம்பி தம்பிதுரை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் தனது கருத்தை அவரிடம் தெரிவித்தார் என்றும் கூறினார்.
அப்படி, வரும் 23-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக எடப்பாடியுடன் சந்திக்க வாய்ப்பு வந்தால், சந்திப்பேன் என உறுதி அளித்தார்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.