தோல்வி பயத்தால், பாஜக பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை.. அமைச்சர் உதயநிதி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2024, 2:42 pm

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

விக்கிரவாண்டிக்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர்.

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

வருகிற ஜூலை 10-ந்தேதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

நமது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர் தோல்வி பயத்தால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக-வை பார்த்து மட்டும் பயமில்லை.

மக்களை பார்த்தே பயம். அதனால் தான் தேர்தலையே புறக்கணித்து விட்டார்.பாஜக-வை பார்த்தும் பயம். அதனால் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடவில்லை என்று கூறினார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!