அதிமுக குறி வைத்தது சூர்யா சிவாவுக்கு அல்ல… அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2023, 11:19 am

அதிமுக குறி வைத்தது சூர்யா சிவாவுக்கு அல்ல… அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணி தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் பாஜக சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. பின்னர் திருச்சி சிவாவும், டெய்சி சரணும் சமரசம் ஆனார்கள். அதேசமயம், திருச்சி சூர்யா இப்படி பேசியதால் 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

இதனையடுத்து கட்சியில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். இதனையடுத்து எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்த சூர்யா சிவா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை பற்றியும் அதிருப்தியோடு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு தகவல் பரவியது. திருச்சி சூர்யா, அதிமுகவில் இணைய உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அப்பாயின்மெண்ட் வாங்கிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. திருச்சி சூர்யாவை வைத்து பாஜகவையும், திமுகவையும் அட்டாக் செய்யலாம் எனத் திட்டமிட்டு, அவரை அதிமுகவில் சேர்ப்பதாக கூறப்பட்டது.

உடனே உஷாரான அண்ணாமலை, திருச்சி சூர்யாவை மீண்டும் கட்சியில் சேர்த்து அவர் வகித்து வந்த பதவியிலேயே மீண்டும் தொடரலாம் என அறிவித்தார். திருச்சி சூர்யாவும், அண்ணாமலையை முதல்வர் ஆக்காமால் ஓயமாட்டேன் எனச் சூளுரைத்து, மகிழ்ச்சியாக பாஜகவில் தொடர ரெடியாகிவிட்டார்.

அதிமுக போட்ட ஸ்கெட்ச் புஸ்வானமாகிவிட்டதே என பாஜகவினர் பேசி வந்தனர். ஆனால், இந்த நேரத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு காரியத்தைச் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி சூர்யா மீண்டும் பாஜகவில் இணைந்த நிலையில், மற்றொரு பாஜக முக்கிய பிரமுகரை எடப்பாடி பழனிசாமி சைலண்டாக அதிமுகவுக்கு இழுத்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த தங்கராஜ் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான தங்கராஜ், கோட்டைமேட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து ஓபிசி அணி மாநில செயலாளராக இருந்து வந்த நிலையில், அவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

இந்த விஷயம் தமிழக பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறும் முக்கிய நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோரை கட்சியில் சேர்த்தார் எடப்பாடி. இப்போது கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாஜகவின் பல முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 415

    0

    0