கோவையில் அதிமுக – திமுக இடையேதான் போட்டி.. அண்ணாமலை எல்லாம் தூசு.. எஸ்பி வேலுமணி அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 6:30 pm

கோவையில் அதிமுக – திமுக இடையேதான் போட்டி.. அண்ணாமலை எல்லாம் தூசு.. எஸ்பி வேலுமணி அதிரடி!

மக்களவை தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் கோவை மக்களவை தொகுதியின் வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன், பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன்மற்றும் நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரை அறிமுகப்படுத்தி எஸ். பி., வேலுமணி சிறப்புரையாற்றினார்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு சந்திக்கக்கூடிய முதல் தேர்தலில் வெற்றி பெறுவோம்;
சட்டமன்ற முன்னாள் தலைவர் தனபால் தலைவர் காலத்திலிருந்து தொடர்ந்து எம்.எல். ஏ., வாக இருந்தவர் அமைச்சராக, சட்டப்பேரவை தலைவராக இருந்து கட்சிக்காக உழைத்தவர்.

எம்.ஜி.ஆர்., தான் நீலகிரி வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் என பெயர் வைத்தவர். படித்தவர், சிறப்பான பல்வேறு திட்டங்களை பெற்று தருவார். அடுத்து, கோவை தொகுதி சிங்கை ராமச்சந்திரன், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாக்கு சேகரிக்க வேண்டும்.

முன்னாள் 1991 எம்.எல். ஏ. வாக சிங்கை கோவிந்தராஜன் மகன், எம்.ஜி.ஆர்., தான் வேட்பாளரின் தந்தைக்கு திருமணம் செய்து வைத்தவர். ஜெயலலிதாவால் பெயர் சூட்டப்பட்ட கோவை வேட்பாளரை ஐ.டி., விங் மாநில தலைவராக நியமிக்கப்பட்டவர். 15 லட்சம் மாதம் பெறக்கூடிய பணியை விட்டு தற்போது கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்.

குழந்தையிருந்து கட்சிக்காக வேலை செய்து வருகிறார்; களத்தில் சிறந்த வேட்பாளர் இவர் தான். பொள்ளாச்சி வேட்பாளர் பெரிய படிப்பு படித்தவர், இவருடைய தந்தை கட்சியில் உழைத்தவர்.3 வேட்பாளர்களும் அறிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 2-3-6 மாதங்கள் போய்விடும் என சொல்லப்பட்ட நிலையில், 4 வருடங்கள் 2 மாதங்கள் ஆட்சி செய்தார்.

கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகால வளர்ச்சியை தந்தவர்.களத்தில் நம்முடைய வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர் ஆசி உள்ளது, இந்த கட்சியை அழிக்க நினைத்தார்கள், ஆனால் முடியவில்லை. இந்த கட்சியை 2 ஆக பிரிந்ததை சேர்த்து சோதனைகளை கடந்து தமிழக உரிமையை மீட்ட ஜெயலலிதா ஆசி உள்ளது.களத்தில் உள்ள வேட்பாளர் தூசு, அதிமுக வேட்பாளர் பக்கத்தில் வர முடியாது, சமூக வலைத்தளங்களில் போட்டால் மட்டும் முடியாது.

நீலகிரியில் பெரிய ஜாம்பவான்கள் தான். மாற்று கருத்தில்லை. நம்முடைய வேட்பாளர் சாதாரண வேட்பாளர் தான். அதிமுக வலுவான கட்சி, அதிக திட்டங்கள் தந்த கட்சி. கோவை தொகுதியில் யார் போட்டி என வேலுமணி சொன்னதற்கு, கூட்டத்தில் அண்ணாமலை பெயர் சொன்னபோது, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தான் என்று வேலுமணி சொல்லி உரையை தொடர்ந்தார்.

மேயர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வாய்ப்பு கொடுத்தும் , கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர், திமுகவில் கோவையில் ஆட்கள் இல்லை போல, வேட்பாளர் தகுதியில்லை போல, கொள்கை இல்லாதவர், விசுவாசம் இல்லாதவர் என சாடினார்.

அண்ணாமலை கரூரில் ஏன் நிற்கவில்லை, கரூருக்கு பதில் கோவையில் நிற்கிறார், திமுக – அதிமுக இடையே தான் போட்டி, பாஜகவிற்கு 4% வாக்கு உள்ளது. பாமகவிற்கு வாக்கு உள்ளதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இங்கு உள்ளதா? பாஜக, திமுக கூட்டணி கட்சிகளும் இங்கு இல்லை.

ஜி.கே.வாசன் கட்சி உள்ளதா? சரத்குமார் பெயர் சொன்னபோது கூட்டத்தில் சிரிப்பலை , அடுத்து, பொள்ளாச்சி வேட்பாளர் – அதிமுக பொறுப்புகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்சியில் மக்களுக்காக பணியாற்றுவார்கள், திமுக முறைகேடு செய்து உள்ளாட்சியில் வெற்றிப்பெற்றார்கள்.

சென்னையில் மழை வெள்ளம் நடந்த போது திமுகவினர் வந்தார்களா?
அதிமுக கூட்டணி தர்மத்தை பாதுகாக்க வேண்டும், கூட்டணிக்குள் இருந்து குழப்பம் செய்தது திமுக. நம்முடன் கூட்டணி வைத்து தான் தமிழகத்தில் சில கட்சிகள் வளர்ந்தது. கூட்டணியில் 90% முறைப்படி ஜனநாயக, தர்மப்படி வேலை செய்வார்கள்.

நம்மை விட்டு போனவர்கள் நாம் முறையாக நடப்பதால் நம்மிடம் திரும்பி வந்துவிட்டார்கள்.எப்போது சரித்திரம் நம் மாவட்டம். 2011 முழுமையாக வெற்றி என்பது இணைந்து நடத்திய ஜெயலலிதா கோவை மாவட்ட கூட்டம் தான் ஆட்சி மாற்றத்திற்கு காரணம். திருச்சி, மதுரை, கோட்டை என அடுத்தடுத்த கூட்டம், பல சரித்திரங்களை நிகழ்த்தியது கோவை மாவட்டம். என்ன வேணாலும் நினைக்கட்டும், கருத்து திணிப்பு தான் போடுகிறார்கள். பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.

ஜெயலலிதா எதிர்மறையான செய்தி வரும்போது மக்களுக்கு பணியாற்றுங்கள் என சொல்பவர், எப்போதும் பத்திரிக்கை நம்ப மாட்டார்கள்.தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள் வாக்கு சதவீதம் எப்படி என்று? 10 ஆண்டுகள் பாஜக, 3 ஆண்டுகள் திமுக என்ன செய்தது? நாம் 50 ஆண்டுகால இல்லாத வளர்ச்சியை கொடுத்தோம். அனைத்து திட்டங்களும் நாம் போட்டது, எப்படி திமுக வாக்கு கேட்பார்கள், வாக்கு கேட்க மற்றவர்களுக்கு தகுதியில்லை, அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டது.

520 தேர்தல் அறிக்கை ஒன்றும் செய்யவில்லை. இன்னும் நீர் தேர்வை விடவில்லை. ஏதோ பிரதமர் ஆக போவது போன்று அறிக்கை கொடுத்துள்ளார்கள்.

கடுமையான விலை உயர்வால் திமுக காரர்களை திமுகவிற்கு வாக்கு போட போவதில்லை.குறைவான காலம் உள்ளது, கூட்டணி கட்சிகளை அரவணைத்து போக வேண்டும், பொறுப்பாளர்களை கூட்டணி கட்சிகளுடன் அரவணைத்து செல்ல வேண்டும்; எதிரணியினரை குறைவாக மதிப்பிடக்கூடாது.

திமுக தான் எப்போது எதிரி, கடுமையாக பூத் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும். முழுமையாக மற்ற பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சுழன்று பணியாற்ற வேண்டும். நிறைய கட்சிகள் நம்முடன் பேசிக்கொண்டே துரோகம் செய்து விட்டு சென்று விட்டார்கள்.

50 வாக்கார்களுக்கு ஒரு பூத், 10 பூத்திற்கு ஒரு பொறுப்பாளர், 350 வாக்கு ஒரு பூத்திற்கு குறைய கூடாது, வீடு வீடாக சென்று திமுக செய்யாததை சொல்ல வேண்டும்.

திமுக பொய் வாக்குறுதிகள், 3 ஆண்டு துயர ஆட்சியை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்; அதிமுகவில் உறுப்பினராக உள்ள வாய்ப்பை பெரிதாக நினைக்க வேண்டும். என்னுடைய தந்தை கிளை செயலாளராக இருந்தவர்.

கட்சியின் ஆரம்பத்தில் இருந்து இருப்பவர்கள் இன்றும் உள்ளனர், கட்சிக்காக முன் நின்று உழைப்பார்கள், கட்சிக்காக விசுவாசமாக இருக்கனும், இது ஒரு போர், பதவி கொடுத்த கட்சிக்காக போராடி வாக்கு பெற வேண்டும்,எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இல்லை எடப்பாடி பெற்று தந்த இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும், பொதுமக்களை அணுகி திமுகவும், மற்ற கட்சிகளும் நமக்கு எதிரி, திமுக, பாஜக நமக்கு இணை கிடையாது. என்று பேசி நிறைவு செய்தார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 291

    0

    0