இடைத்தேர்தலில் களத்தில் இறங்கிய அதிமுக… காங்கிரஸ் கட்சியுடன் நேருக்கு நேர் போட்டி : ஜிகே வாசன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 8:50 am

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விரும்பியது.

மக்கள் நலன், கூட்டணி கட்சிகளின் நலனை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் நேற்று ஜிகே வாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

இந்த தொகுதியில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலை பொறுத்து அதிமுக போட்டியிடுவதாக தெரிகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!