நாய் பிடிக்கற வண்டியும், ஆள் பிடிக்கற பாஜகவும் ஒன்றுதான்.. கொந்தளித்து பேசிய அதிமுக பேச்சாளர் விந்தியா!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2024, 6:41 pm
நாய் பிடிக்கற வண்டியும், ஆள் பிடிக்கற பாஜகவும் ஒன்றுதான்.. கொந்தளித்து பேசிய அதிமுக பேச்சாளர் விந்தியா!
அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசியதாவது திமுக கட்சி போல, தமிழகத்தினையும், தமிழக மக்களையும் ஏமாற்ற நிறைய பேர் கிளம்பி வந்து கொண்டிருக்கின்றார்கள். திமுக பத்தாது என்ற குறைக்கு இன்றைக்கு பாஜக கட்சியும் கிளம்பி வருகின்றது. கார்ப்பேரஷேனுக்கும், பாஜக கட்சிக்கும் ஒன்றும் வித்யாசம் கிடையாது. கார்ப்பரேஷன் நாய் பிடிக்கின்ற வண்டியை வைத்து அலையராங்க, ஆனால், பாஜக கட்சி ஆள் பிடிக்கின்ற வண்டியை வைத்து அலையராங்க.
பாஜக கட்சியில் நீங்கள் சேரனுமா ? உங்களுக்கு சில தகுதிகள் இருக்கனும், நீங்கல் ஏதேனும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கணும், நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருக்க வேண்டும், உங்களை உங்கள் குடும்பத்தினர் யாரும் மதிக்க கூடாது. 4 வது கண்டிசன், மோடியை தலைவராக பார்க்க வேண்டும், அண்ணாமலையை கடவுளாக பார்க்க வேண்டும் என பேசினார்.