சென்னை மக்களே உதவி தேவையா? மீண்டும் வந்தது RAPID RESPONSE TEAM!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 10:47 am

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிந்தது.

அந்த மாவட்டங்களில் மழை குறைந்து பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டது.

இந்த நிலையில் சென்னை மக்களுக்கு உதவி செய்ய மீண்டும் RAPID RESPONSE TEAM அமைத்துள்ளது அதிமுக.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பக்கத்தில், மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம்.

மேலும் படிக்க: உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் மழை.. வானிலை மையம் கடும் எச்சரிக்கை!

எனவே தான், உதவ அதிமுக சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.

தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும் என பதிவிட்டுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!