அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோவில் அனுமதி!!!
Author: Udayachandran RadhaKrishnan22 December 2023, 8:20 am
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோவில் அனுமதி!!!
கொரோனா உலக நாடுகளை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியது. ஏராளமான மரணங்கள். பொருளாதார மந்தங்கள் என ஒவ்வொரு நாட்டையும் பெரிதும் பாதிக்கப்பட வைத்தது இந்த கொரோனா.
ஒரு வழியாக கொரோனா ஒழிந்தது என மக்கள் நிம்மதியாக இருந்தாலும், அவ்வப்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பெரியதாக பாதிப்பு இல்லை என்று மக்கள் பெருமூச்சு விட்டாலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் ஓரிரு நபர்களுக்கு மட்டுமே தொற்று பதிவாகி இருந்த நிலையில் கிடுகிடுவென உயர்ந்து 104 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ தாண்டுவது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.