அதிமுக பொதுக்குழு கூட்டம்…. வரும் 14ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய ஆலோசனை : நிர்வாகிகளுக்கு பரபரப்பு அறிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2022, 1:37 pm
அதிமுக பொதுக்குழு மற்றும் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என்று அதிமுக தலைமை முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி,நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில்அதிமுக தலைமை கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
எனவே,ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.