அதிமுக பொதுக்குழு.. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் குவிந்த தேனி அதிமுக நிர்வாகிகள் : முன்னாள் அமைச்சர்களும் வருகையால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 10:54 am

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் சந்தித்து பேசினர்.

அதிமுக பொதுக்குழு பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் பொதுக்குழுவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிலையில், வானகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இவர்களுடன் எஸ்.டி.கே.ஜக்கையனுடன் தேனி மாவட்ட அதிமுகவினர் திரளானோர் சென்றனர். நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சென்னை வந்துள்ள உறுப்பினர்கள் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது இல்லம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!