திருப்பதி மலைக்கு திடீர் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் : விருந்தினர் மாளிகையில் ஓய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 10:01 pm

திருப்பதி மலைக்கு திடீர் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் : விருந்தினர் மாளிகையில் ஓய்வு!!

ஏழுமலையான் தரிசனத்திற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தார்.

திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருப்பதி மலையில் இரவு தங்கும் அவர் நாளை காலை ஏழுமலையானை வழிபட இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் உள்ள வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர் வராஹ சாமியை வழிபட்டார்.

நாளை காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!