திமுகவை குறை கூற அதிமுக சொல்லும் சாக்கு.. பாஜகவுடன் Under Dealing : ஆர்எஸ் பாரதி குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2024, 1:59 pm
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கு தி.மு.க.வை குறை கூறியதற்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பூத் கேப்சரிங்கை தொடங்கியதே அ.தி.மு.க.தான். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் கலாச்சாரம் தொடங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. சொல்லும் சாக்குதான் புறக்கணிப்பு.
டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. இடைத்தேர்தலில் ஓட்டுப்போட வேண்டாம் என அதிமுகவினரிடம் சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்தார்கள் என்று அர்த்தம்.
வன்னியர் சமூகத்தினருக்கு பல நன்மைகளை செய்துள்ளதால் எதையும் சந்திக்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர் என்றார்.