அதிமுக பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது… கொடியை ஏற்றிய இபிஎஸ்.. ஹெலிகாப்டரில் 1 டன் ரோஜா மலர் தூவி வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 10:43 am

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் சிறப்புரைக்கு முன்னர் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பல முக்கிய அதிமுக தலைவர்கள் இந்த கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சமையல் பணிகளில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…