கூட்டணி குறித்து அதிமுக முக்கிய முடிவு? மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 11:12 am

கூட்டணி குறித்து அதிமுக முக்கிய முடிவு? மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி!!!

தமிழக அரசியலில் கூட்டணியில் இருக்கும் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் – அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை (25.09.2023 ) திங்கட்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற மாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!