திடீரென அண்ணாமலையை சந்தித்த அதிமுக நிர்வாகிகள்… அரசியலில் அடுத்தடுத்து ட்விஸ்ட்!!!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2023, 10:41 am
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பாஜக கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கர்நாடக முழுவதும் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பாக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி உத்தரவையடுத்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அண்ணாமலை கர்நாடாகவில் நேற்று சந்தித்துள்ளனர். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சார்பாக கர்நாடக மாநில அதிமுக மாநிலச் செயலாளர் திரு எஸ்.டி. குமார் அவர்கள் நமது மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @dpradhanbjp அவர்களை சந்தித்தார்.
அப்போது 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அஇஅதிமுகவின் ஆதரவை கர்நாடக பாஜக கோரியிருந்த நிலையில், அதிமுகவின் கர்நாடக மாநில தலைவர்களும் தொண்டர்களும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிவித்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்