ஓபிஎஸ் நாகரீக கோமாளி… பைத்தியம் : பரபரப்பை கிளப்பிய அதிமுக போஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 4:37 pm

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதலை அடுத்து தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுகவில் பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

பின்னர், ஓபிஎஸ் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இபிஎஸ் தரப்பினர் எச்சரித்திருந்ததனர். அப்படி இருந்த போதிலும் திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தினார்.

இந்நிலையில், இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம்..

1.1/2 கோடி கழக தொண்டர்கள் 2504 கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதோடு ஓ.பன்னீர்செல்வம் வகித்த அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக அனைத்து பதவிகளையும் நீக்கியும் கழகமும் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் OPS கோமாளியே! இரட்டை இலை சின்னத்தை பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும், தகுதியும், இல்லை பைத்தியமே

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக ஓட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!