அண்ணாமலைக்கு கைக்கொடுக்கும் அதிமுக? மேலிடம் கொடுத்த சிக்னல் : நடைபயணத்தில் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 10:57 am

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து ஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 25 தொகுதிகளை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ள 9 இடங்களில் தேர்தல் பணிகளை ஏற்கனவே துவக்கியுள்ளது.

இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 28 ஆம் தேதி முதல் என் மண் , என் மக்கள் என்ற தலைப்பில் நடைபெயணம் மேற்கொள்ளவுள்ளார். ராமேஸ்வரத்தில் வருகிற 28 ஆம் தேதி நடைபயணத்தை பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார்.

இந்த நடைபயணத்தின் போது விடியல…முடியல எனும் வாசகத்துடன் கூடிய மக்கள் புகார் பெட்டி வைக்க இருப்பதாகவும், இதில் மக்கள் தங்களுடைய புகார்கள் மற்றும் குறைகளை மனுவாக கொடுக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபயணம் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் படி பாஜக கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லயில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வசன், ஏ.கே.மூர்த்தி, ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். எனவே ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ள நடைபயணத்தில் இந்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் நடைபயண தொடக்க விழாவில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லையென்றும், அதிமுக சார்பாக நிர்வாகிகள் ஒருவர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

  • Dinasari Movies Actress Cynthia Talk About Trolled திருநங்கைனு சொன்னாங்க.. ஸ்ரீகாந்த் உடன் டிரோல் செய்றாங்க.. தினசரி பட நடிகை வருத்தம்!
  • Views: - 395

    0

    0