அதிமுக தேர்தல் அறிக்கை மட்டுமே நடைமுறைக்கு சாத்தியம்.. உரிமையை மீட்க ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் : இபிஎஸ் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 11:21 am

அதிமுக தேர்தல் அறிக்கை மட்டுமே நடைமுறைக்கு சாத்தியம்.. உரிமையை மீட்க ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் : இபிஎஸ் அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

பிரசாரத்தை தொடங்கும் முன்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்.

தமிழர்உரிமைமீட்போம்! தமிழ்நாடு_காப்போம்!நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்!” என்று பதிவிட்டுளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?
  • Close menu